அடக்கி வாசிக்கும் அமலாபோல்

0
94

அடக்கி வாசிக்கும் அமலாபோல்

விவாகரத்துக்கு பின், மீண்டும் பரபரப்பாகத் திரைப்படங்களில் நடித்து வந்த அமலா போல், திடீரென சர்ச்சைகளில் சிக்கினார்.
‘மீ டூ’ விவகாரத்தில் கருத்துத் தெரிவித்தது, சர்ச்சைக்குரிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரத்தில், அவர் மீது விமர்சனம் எழுந்தது. அதிலும், லுங்கி கட்டியபடியும் புகைப் பிடிப்பது போன்றும், அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளார், அமலா போல். ‘தொடர்ந்து வாய்ப்புகள் வரும்போது, எதற்கு தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்க வேண்டும்’ என, அவரது நட்பு வட்டாரங்கள் அளித்த ஆலோசனையின் காரணமாகவே, அடக்கி வாசிக்கிறாராம் அமலா.