அமெரிக்கா மீண்டும் எதிர்ப்புவாதக் கொள்கையை நோக்கி பயணிப்பதாக குற்றச்சாட்டு

0
151

அமெரிக்கா மீண்டும் எதிர்ப்புவாதக் கொள்கையை நோக்கி பயணிப்பதாக குற்றச்சாட்டு

அமெரிக்கா மீண்டும் எதிர்ப்புவாதக் கொள்கையை நோக்கி பயணிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கியுபாவின் ஆளும் கட்சியான கமியுனிச கட்சியினது தலைவரான ராவுல் காஸ்ட்ரோவின் சகோதரரான ஃப்டல் காஸ்ட்ரோவினால் ஏற்படுத்தப்பட்ட கியுப புரட்சியின் 60வது வருடப்பூர்த்தி நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கியுபாவின் முன்னாள் ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கியுப புரட்சிக்கு இன்னும் வயதாகவில்லை. கியுபாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.