ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்

0
262

ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்

ஆரண்ய காண்டம்‘படத்துக்குப் பின் 08 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆரண்ய காண்டம்படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும்.
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஆபாசப் பட நடிகை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதுபற்றி பேட்டி ஒன்றில் குமாரராஜா பேசும் போது, இந்தப் படத்துக்குள் இடம்பெறும் மல்லு அன்கட் என்கிற ஆபாசப் படத்தில் நடிப்பவராக ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தது வித்தியாசமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.