இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை, இசை தான் என்னைத் தேர்ந்தெடுத்தது

0
190

இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை, இசை தான் என்னைத் தேர்ந்தெடுத்தது

விரைவில் இசைக் கல்லூரியைத் தொடங்க உள்ளதாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை சார்பில், இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், பாடல்கள், இசையின் மூலம் மனிதனுக்கு சுத்தமான ஆற்றல் கிடைக்கிறது. இசையின் மூலம் பல்வேறு அதிசய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது இசையின் மகத்துவம் என்றார். தொடர்ந்து, மாணவர்கள் கேட்ட கேள்விக்கு இளையராஜா பதிலளித்தார். அப்போது, மாணவர் ஒருவர், நீங்கள் இசையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு, இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. இசைதான் என்னைத் தேர்ந்தெடுத்தது என்றார்.
வெளிநாடுகளில் இசைக் கச்சேரிக்கு சென்றபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து மற்றொரு மாணவர் கேட்ட போது, அங்கே நடைபெறும் இசை நிகழ்ச்சியின்போது அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு காணப்பட்டது என்றார். இசைக்கல்லூரி தொடங்குவீர்களா? என்ற கேள்விக்கு, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளேன். விரைவில் இசைக் கல்லூரி தொடங்கப்படும் என்றார் அவர்.