நான் யாரிடமும் அப்படி கேட்கவில்லை. கீர்த்தி சுரேஷ்

0
195

நான் யாரிடமும் அப்படி கேட்கவில்லை. கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்திசுரேஷ் கடைசியாக விஜய்யின் சர்கார் படத்தின் நடித்திருந்தார். தற்போது அவர் எந்த தமிழ் படமும் ஒப்புக்கொள்ளவில்லை.
சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். அவரது அம்மா மற்றும் பாட்டி நடிகைகள் தான். கீர்த்தியின் பாட்டி ரெமோ படத்தில் நடித்திருந்தார், மேலும் மற்ற சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் தன் பாட்டிக்கும் வாய்ப்பு கேட்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என கீர்த்தி சுரேஷ் பேட்டியளித்துள்ளார். “நான் அப்படி யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. வாய்ப்பு கேட்டு நடிக்கும் அளவுக்கு பாட்டி ஒன்றும் முழுநேர நடிகை அல்ல. யார் இப்படி வதந்தி கிளப்புகிறார்கள் என தெரியவில்லை” என அவர் பதில் அளித்துள்ளார்.