
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பு நல்கிய திரு.கனகசபாபதி கனகேந்திரன் “ஈழவேந்தன்” கடந்த 28.04.2024 அன்று இயற்கையேந்தினார் இவரின் மறையையொட்டி இவர் மாமனிதராக உயர்நிலைப்படுத்தப்பட்டார்
ஒரு அபூர்வமான மனிதர் அசாத்தியமான குணவியல்புகளை கொண்டவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்கும் அவரது ஆளுமையின் சிறப்பியல்புகள். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதர். ,அனைவரையும் கவர்ந்த ஒரு தேசப்பற்றாளர். இவரது மறைவு தமிழர் தேசத்திற்கு என்றுமே பேரிழப்பு.
சிங்கள பௌத்த அடக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வு சிக்குண்டு
சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் வாழ அவர் என்றும் விரும்பியதில்லை. தமிழீழ மக்கள் விடுதலைபெற்று சுதந்திரமாகவும் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதையே வாழ்வின் இலட்சியத்தால் உந்தப்பெற்று தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக நின்றவர். காலந்தோறும் சர்வதேச அரங்கில் எமது போராட்ட நியாயங்களை எடுத்துக் கூறி வந்தவர். சிங்கள பாராளுமன்றில் ஓயாது உரிமைக்குரல் எழுப்பினார். இதனால் இவரது பாராளுமன்ற உறுபினர் உரிமை பறிபோனது.தொடர்ந்து சிங்கள அரச பயங்கரவாதம் இவரை கொல்லத் திட்மிட்டிருந்த வேளையில் தாய் நாட்டை விட்டு கனடா நாட்டில் தஞ்சம் புகுந்தார் .
2009 இனவழிப்பை தொடர்ந்து சர்வதேச அரங்கில் தமிழீழ விடுதலைக்கு சாவின் இறுதிக்கணம் வரை அவராற்றிய ஆழமான பணிகள் என்றுமே பாராட்டுக்குரியவை.



