
நடிகர் விஜய் இப்போது கோட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் . வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்து வருகின்றனர்.சமீபத்தில் இதன்முதலாவது ஒரு பாடல் வெளியாகி இருந்தது. விசில் போடு என தொடங்கும் அந்த பாடலில் விஜய் அண்ட் கோ-வின் ஆட்டம் மெய்சிலிர்த்தது .
ஆனாலும் இந்நிலையில் வெங்கட் பிரபுவுக்கு விஜய் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
அதாவது இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்திருக்கிறார். அதில் வெங்கட் பிரபு வழக்கம் போல காமெடி, ஆக்சன் என அனைத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறாராம்.
இதுதான் குறை என்று சொல்ல முடியாத அளவுக்கு படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதை பார்த்து சந்தோஷப்பட்ட நடிகர் விஜய் எதற்கும் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என கூறி இருக்கிறார்.
