Close
தாயக விடுதலையே தமிழரின் மூச்சு

‘தராக்கி’ என்றழைக்கப்படும் சிவராம் 18 ம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு 27.04.2024 அன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காகத் தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

ஊடகவியலாளரான ‘தராக்கி’ என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் ‘உதயன்’ பத்திரிகையின் அலுவலக செய்தியாளராகக் கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் யாழ். ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top