
நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய சுற்றுச் சூழல் அமைச்சருமான எரிக் சோல்கெம் கடந்த 28.04.2024 அன்று சிறீலங்கா வந்து ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து திரும்பிய நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில்..
“இலங்கையில் போரின் போது நான் பலமுறை வந்துள்ளேன். எனது நல்ல நண்பர்கள் மற்றும் சகாக்கள் சிங்கள மற்றும் தமிழ் ஆகிய தரப்பில் இருந்தும் கொல்லப்பட்டனர். போரின் முடிவுக்குப் பின்னர் நான் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு திரும்புவது இதுவே முதல் முறை. எனது நண்பர் நோர்வே எம்பி ஹிமான்ஷு குலாட்டி மற்றும் ப்ரோகிளைமிலிருந்து கவின் குமார் கந்தசாமி ஆகியோருடன் இன்று வருகை தந்தது மிகவும் நன்றாக இருந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் எஸ்.ஸ்ரீதரனுடன் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், ஆன்மீக மையத்தை நடத்தி வரும் தனது பழைய நண்பரான ஜெய் மகேஸ்வரனுடன் சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், எங்களை அழைத்ததற்காக கவர்னர் பி எஸ் எம் சார்லஸுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்! வட இலங்கை நிம்மதியாக உள்ளது அது அற்புதம். பாதுகாப்பு நன்றாக உள்ளது. யாரும் போர்க்காலத்திற்கு திரும்ப விரும்பவில்லை,” என்று தெரிவித்தார் .
எரிக் சோல்கெமின் இக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமா , மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சற்குணநாதன் சிறிலங்காவின் தற்போதைய நிலை குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடபகுதி கடுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது பாதுகாப்பு தரப்பினர் சிவில் சமூகத்தினரை மாற்றுக்கருத்துடையவர்களை ஊடகங்களை கண்காணிக்கின்றனர் துன்புறுத்துகின்றனர் அச்சுறுத்துகின்றனர். பொதுமக்களின் காணிகளை கைப்பற்றுவதன் மூலம் இராணுவம் தொடர்ந்தும் தனது முகாம்களை விஸ்தரிக்க முயல்கின்றது, இந்து வழிபாட்டு தலங்களை பௌத்த மதகுருமாரும் தொல்பொருளியல் திணைக்களமும் கைப்பற்றுவதற்கு உதவுகின்றது. இது பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகின்றது அமைதிக்கு எதிரான சூழலை உருவாக்குகின்றது. எரிக் சோல்கெமின் இக் கருத்து
வேறு விதத்தில் சொல்வதானால் – சிங்கள அரசுக்கு வெள்ளையடித்தல் அத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அதன் திட்டங்களை வலுப்படுத்தவும் உதவும் என்றார் .

கடந்த 2009 இனப்படுகொலைக்கு அடிநாதமாக பேச்சுவார்த்தை எனும் நாடகத்தை அரங்கேற்றி இந்திய அமெரிக்க ஊதுகுழலாக விடுதலைப்புலிகளின் விடுதலைக்கான போரை முள்ளிவாய்க்கால் வரை கொண்டுசென்றதட்கும், 3 இலட்சத்திட்கு மேல் மக்கள் கொல்லப்படவும் திரை மறைவில் இருந்வர் என்பதையும் மக்கள் உணராதவர்கள் இல்லை .. மீண்டும் நடைபெறவிருக்கும் தேர்தலில் அமெரிக்காவின் பொம்மையாக நடனமாடும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் வெற்றி பெற வைக்கும் ஒரு தந்திரத்திலேயே இவரின் வருகையும் சந்திப்புகளும் நடைபெற்றது என உள்ளுர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
