Close
தாயக விடுதலையே தமிழரின் மூச்சு

சிறிலங்காவில் கார் பந்தையத்தில் 7 பேர் உயிரிழப்பு

சிறிலங்காவில் உலகையே புரட்டிப்போட்ட கோவிட் தொற்று மற்றும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி காரணமாக மிகப்பெரும் காளியாட்ட நிகழ்வுகள் நடைபெறாத நிலையில் தற்போது மூச்சு விட்டாற்போன்று பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக அந்நாட்டு ராணுவத்தால் நடத்தப்பட்ட கார் பந்தையத்தில் கார் திடீரென பார்வையாளர்கள் மீது மோதியதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்து 21 பேர் காயமடைந்துள்ளனர். மோட்டார் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுவதாக ராணுவத் தளபதி விகும் லியனகே அறிவித்திருந்தார்.

கடந்த 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது ..இலங்கையில் இருக்கும் தியத்தலாவை நரிய கந்தா என்ற பகுதியில் நடைபெற்ற ‘ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் 2024’ (Fox Hill Supercross 2024) என்ற கார் பந்தயம் இடம்பெற்றது.மேலும், இந்த விபத்து தொடர்பாக தியத்தலாவை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top