Close
தாயக விடுதலையே தமிழரின் மூச்சு

8 தமிழரை படுகொலை செய்த 5 பொலீசாருக்கு ஆயுள் தண்டனை..

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி நாள் திருகோணமலை கந்தளாய் பாரதிபுரத்தில் சிறிலங்கா பொலீசாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 8 அப்பாவித் தமிழர்கள் தொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் சம்பந்தப்பட்ட பொலீஸ் நிலைய அதிகாரி உள்ளிட்ட 5 பொலீசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இத் தீர்ப்பினை வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிட்டிய வழங்கினார். மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கந்தளாய் பாரதிபுரத்தில் இக்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக சட்டமா அதிபரினால் அவசரகால உத்தரவு வழக்குகள் நடைமுறைகள் சட்டத்தின் 26 (1) பிரிவின் பிரகாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கந்தளாய், பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிராயுதபாணிகளான 8 தமிழர்கள் பாரதிபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆயுதம் தாங்கிய குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்த கொடூரத்தை பார்த்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டு, குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கே மேற்படி ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்யுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top