Close
தாயக விடுதலையே தமிழரின் மூச்சு

மே 18 தலைவரின் இறுதி நிகழ்வு.. நடந்தே தீரும்..

கடந்த 2009 மே18 ம் திகதி அதிகாலை வேளை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மற்றும் அவரது துணைவியார் மதிவதனி பிரபாகரன் ,சாள்ஸ், தூவாரகா, மற்றும் பாலச்சந்திரன் ஆகியோர் முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே வீரகாவியமாகிவிட்டார்கள் என வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள் (தேசியத்தலைவரின் அண்ணன்) அனைத்து தமிழ் மக்களுக்கும் வெளிப்படையாக அறிவித்துள்ளளார். தமிழகத்தில் இருக்கும் ஊடகம் ஒன்றிற்கு நேர்கானல் ஒன்றை வழங்கிய போது அவர் இவ் அறிவிப்பை விடுத்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அவரது குடும்பம் வீரகாவியமாகிவிட்டார்கள்.. கடந்த 14 வருடங்கள் புலம்பெயர் தேசத்தில் எமது விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்குள் இருந்த முரண்பாடுகள் காரணமாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருந்தோம்.. அந்த அமைப்புக்களும் தலைவர் தொடர்பாக இறுதிப் போர் தொடர்பான சரியான தீர்மானத்தையோ தலைவருக்கான ஒரு வணக்க நிகழ்வை செய்யவோ முன்வராத நிலையில் தற்போது பல பொய் முகங்கள் துவாரகா எனப் பேசுவதும் தலைவர் இருக்கிறார் அவர் மனைவி இருக்கிறார் என பொய்யான வதந்திகளுடன் பலர் வெளிவந்திருக்கிறார்கள்.. எனவே தேசிய் போராட்ட வரலாற்றை திரிபு படுத்தி பொய்யான கருத்துக்களை பரப்பி வரும் இச் சமகால சூழ்நிலைக்கு பல தேசியக் கட்டமைப்புக்களும் துணை போவதை நான் அறிகிறேன். எனவே இனி இவர்களின் செயற்பாடுகளை நம்பி பலன் இல்லை என்ற நிலையில் எனது தம்பிக்கு நான் இருக்கும் காலத்தில் அவருக்கான இறுதி கிரிகையை செய்ய வேண்டும் என்பதற்காக மே18ம் திகதி டென்மார்கில் இறுதி வணக்க நிகழ்வை எனது குடும்பம் சார்பாக செய்ய இருக்கிறோம் . விரும்பிய உணர்வாளர்கள் இந் நிகழ்வில் பங்கு கொள்ள்லாம் எனவும் தெரிவித்தார். அத்துடன் இனி வரும் காலத்தில் தலைவரின் பெயரை அல்லது துவாரகாவின் பெயரால் பலர் நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் எனவும் தனது நேர்கானலில் குறிப்பிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top